×

பசுபதிபுரம் பகுதியில் சாக்கடை வடிகால் இல்லாததால் கழிவு நீர் குளம் போல் தேக்கம்

கரூர், ஜன. 20: கரூர் வெங்கமேடு மேம்பாலத்தின் கீழ்ப்புறம் பசுபதிபுரம் பகுதி உள்ளது. ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் இந்த பசுபதிபுரம் பகுதியில் உள்ளன. ஆனால், குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் செல்லும் வகையில் சாக்கடை வடிகால் வசதி இந்த பகுதியில் இல்லை. இதன் காரணமாக, பல்வேறு சாக்கடை கழிவுகள் அனைத்தும் குளம் போல நீண்ட காலமாக தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம், கொசுக்கள் உற்பத்தி போன்ற பல்வேறு தொந்தரவுகள் காரணமாக பகுதி மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பசுபதிபுரம் பகுதியில் சாக்கடை வடிகால் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, இந்த பகுதி மக்கள் நலன் கருதி, பசுபதிபுரம் பகுதியில் விரைந்து சாக்கடை வடிகால் வசதி கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா