×

கரூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

கரூர், ஜன. 20: வரத்து குறைவு தேவை அதிகம் காரணமாக மீன் மார்க்கெட்டில் அனைத்து வகையான மீன்களும் நேற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. கரூர் அன்சாரி தெரு, வெங்கமேடு, காந்திகிராமம், தாந்தோணிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், முக்கிய பண்டிகை நாட்களிலும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரூர் மார்க்கெட்டுக்கு புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி போன்ற பகுதிகளில் இருந்தும் மீன் வகைகள் மொத்தமாக வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடல் மீன்கள் மட்டுமின்றி, ஆற்று மீன்கள், டேம் மீன்கள் போன்றவையும் இந்த மார்க்கெட்டுகளில் வாரந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலானவர்கள் கடல் மீன்களையே அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாகவே, மீன்கள் கூடுதல் விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை விற்பனை செய்யப்பட்ட விலையை விட அனைத்து வகையான மீன்களும் ரூ. 50 முதல் 100 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், பொங்கல் பண்டிகை நாட்கள் என்பதாலும், ஐயப்பன் சீசன் முடிவடைந்த நிலை என்பதாலும், மீன்களின் தேவை கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது எனவும், வரத்து குறைவு, தேவை அதிகம் என்பதால் மீன்களின் விற்பனை மார்க்கெட்டில் தற்போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சில வாரங்களில் விலை குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...