×

கரூர் நகரில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

கரூர், ஜன. 20: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொசுக்களை கட்டுப்படுத்திட நகராட்சியினர் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சியில் உள்ள 48வார்டுகளில் தாந்தோணிமலை, சணப்பிரட்டி, வெங்ககல்பட்டி, வேலுசாமிபுரம், பசுபதிபாளையம், வடக்குப்பசுபதிபாளையம் போன்ற பகுதிகளில் நெருக்கடியான அளவுக்கு குடியிருப்புகள் உள்ளன. இதே நேரத்தில், இந்த பகுதியில் ஆங்காங்கே முட்புதர்களும், தேங்கிய நிலையில் சாக்கடை வடிகால்களும் உள்ளன. இதன் காரணமாக, இந்த பகுதிகளில் கொசுக்களின் தொந்தரவு காரணமாக பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொசுக்களை கட்டுப்படுத்திட நகராட்சி சார்பில் பணியாளர்கள் மூலம் கொசு மருந்தடிப்பது, அபேட் மருந்து வீடுகளுக்கு சப்ளை செய்வது போன்ற பணிகள் கடந்த மாதம் வரை நடைபெற்றது. தற்போதைய நிலையில், கொசுக்கள் ஒழிப்பு குறித்து அதிகளவு கவனம் செலுத்தப்படாமல் உள்ளது என கூறப்படுகிறது. இதன் காரணமாக, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொசு தொல்லை காரணமாக அனைத்து தரப்பினர்களும் அவதிப்படுகின்றனர். பற்றாக்குறைக்கு சில சமயங்களில் மின்தடையும் செய்யப்படுகிறது. இதனால், அனைத்து தரப்பினர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நகராட்சி போதிய கவனம் செலுத்தி அதிகரித்து வரும் கொசுக்களை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...