×

40 ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை

புதுச்சேரி, ஜன. 20:  புதுச்சேரியில் சமீபகாலமாக வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. சர்வ சாதாரணமாக ரவுடிகள் ஒருவருக்கு ஒருவர் வெடிகுண்டு வீசி தீர்த்துக்கட்டுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், முத்தியால்பேட்டையில் குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து குப்பை பொறுக்கும் தொழிலாளி படுகாயம் அடைந்தார். கடந்த 13ம் தேதி இரவு, லாஸ்பேட்டை விமான நிலையம் பின்புறம் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் அருகே ரவுடி சோழனை தீர்த்துக் கட்ட வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பல் சிக்கியது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றதா? என லாஸ்ேபட்டை நெருப்புக்குழி கோபி (35), மடுவுபேட் ரமேஷ் என்ற குட்டி ரமேஷ் (24), கருவடிக்குப்பம் ஏழுமலை என்ற பங்க் ஏழுமலை (44), அசோகன், ஜெரிக்கோ உள்ளிட்ட 9 ரவுடிகளின் வீடுகளிலும் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மேலும், அவர்கள் பதுங்கியிருந்த இடம் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல், பெரியகடை காவல் சரகத்தில் குமரகுருபள்ளம், கோவிந்தசாலை உள்ளிட்ட பகுதிகளில் சத்தியராஜ், எட்வின், சதீஷ்குமார், சூர்யசந்திரன், மணிமாறன் என்ற முருகன், கிருஷ்ணன் என்ற சூசை, சரவணன், பாலாஜி, சக்தி என்ற சுப்பிரமணி, ஜோதி, சதீஷ் ஆகிய ரவுடிகள் மற்றும் கிரிமினல்களின் வீடுகளில் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். முத்தியால்பேட்டை காவல் சரகத்தில் முத்தியால்பேட்டை, சோலைநகர், காலாப்பட்டு பகுதிகளில் சரவணன் என்ற வேலு, வேணு என்ற வேணுகோபால், மாதவன், பிரபு என்ற நாராயணன், அருண்குமார், வாஞ்சிநாதன், துரைசாமி, ஜெயசீலன், மூர்த்தி, பாஸ்கர், கவுதமன் ஆகிய ரவுடிகளின் வீடுகளில் முத்தியால்பேட்டை மற்றும் காலாப்பட்டு போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.நெட்டப்பாக்கம் சரகத்தில் கரியமாணிக்கம், ஏரிப்பாக்கம் காலனி பகுதிகளில் நாகராஜ், தமிழரசன் ஆகியோரது வீடுகளிலும், அரியாங்குப்பம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட நோணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ரூபன், வர்மா, இமயவன், பாலாஜி, தவளக்குப்பம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பூரணாங்குப்பம், தானம்பாளையம், அபிஷேகப்பாக்கம் பகுதிகளில் பிரேமா என்ற பிரேம்குமார், முகன், விக்கி என்ற விக்னேஸ்வரன் ஆகிய ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரவுடிகள் வீட்டில் இருக்கிறார்களா? என்பது பற்றியும் அவர்களது நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. புதுச்சேரி முழுவதும் மொத்தம் 40 ரவுடிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : houses ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...