×

எறும்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்

சேத்தியாத்தோப்பு, ஜன. 20:சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது எறும்பூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன், ஊராடசி மன்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஊராட்சியின் சிறப்பு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த ஊராட்சி மன்றக்கட்டிடம் கட்டப்பட்டு சில நாட்கள் வரை நன்றாக இயங்கி வந்த நிலையில், தற்போது பாழடைந்து காணப்படுகிறது.மேலும் கட்டிடத்தின் பல இடங்களிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறான சூழலில் இன்றைய நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம், கால்நடைகள் கட்ட பயன்பட்டு வருகிறது.

புதிய ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்ட நிலையில் இந்த கட்டிடம் இன்னமும் கால்நடைகளை பாதுகாக்கவே பயன்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த முறை ஊராட்சி மன்ற நிர்வாகம்செயல்பாட்டில் இருந்தபோது கட்டப்பட்ட கட்டிடம் அதன்பிறகு பயன்பாட்டில் இல்லாமல் போனதால் இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை இப்பகுதி மக்கள்கால்நடைகளை பாதுகாக்கும் அலுவலகமாக மாற்றிவிட்டனர். புதிய ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளதால் இந்த அலுவலகத்தை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.

Tags : Panchayat Office building ,village ,Erumpur ,
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு