×

ஆரல்வாய்மொழி அருகே பூட்டிய கடையில் புகுந்து பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

ஆரல்வாய்மொழி, ஜன. 20:  ஆரல்வாய்மொழி அருகே நள்ளிரவு, பூட்டியிருந்த கடையில் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் பூதலிங்கம் மகன் முத்து(30). இவரது மனைவி சோபனா(29). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்து வீட்டின் பின்பகுதியில் கடை வைத்துள்ளார். அதுபோல வீட்டையொட்டி குளியலறையும் உள்ளது. வீட்டில் இருந்து கடை மற்றும் குளியலறைக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முத்துவின் தாயார் மாரியம்மாள் சற்று தொலைவில் பிசி.காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு முத்து வெளியூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவரது மனைவி சோபனா கூட்டுறவு நூற்பாலையில் இரவு பணிக்கு சென்றுள்ளார். இதனால் மாரியம்மாள் கடையில் இருந்து விற்பனையை கவனித்து வந்துள்ளார். வீட்டில் 3 குழந்தைகளும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இரவு 10 மணியளவில் மாரியம்மாள் கடையை பூட்டிவிட்டு, 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பி.சி.காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது குழுவில் இருந்து வாங்கிய ரூ.27 ஆயிரம் பணத்தை பர்சில் வைத்து கடையில் பாதுகாப்பாக வைத்து சென்றுள்ளார். மேலும் அன்றைய விற்பனை பணமும் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மாரியம்மாள் வந்து கடையை திறந்து வியாபாரம் நடத்தியுள்ளார். அப்போது சில்லறை தேவைப்பட்டதால் நேற்றுமுன்தினம் விற்பனையான பணத்தை பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பர்சில் வைத்திருந்த ரூ.27 ஆயிரம் இருக்கிறதா என பார்த்தபோது அதுவும் திருடப்பட்டிருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டு குளியலறை கூரையான ஆஸ்பஸ்டாஸ் ஷீட்டை உடைத்து அது வழியாக வீட்டுக்குள் வந்து கடையில் நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பணத்தை சாவகாசமாக திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயங்களும் சேகரிக்கப்பட்டன. தெரிந்த நபர்தான் திட்டமிட்டு கடையில் திருடி சென்றிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Araliyawali ,shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி