பிலாங்காலையில் டேவிட் மைக்கேல் குருத்துவ வெள்ளி விழா ஆயர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

திங்கள்சந்தை, ஜன.19: குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை டேவிட் மைக்கேல் அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி அவரது குருத்துவ வெள்ளி விழா திருப்பலி அழகியமண்டபம்  பிலாங்காலை தூய சூசையப்பர் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.குருத்துவ வெள்ளி விழா, நன்றி திருப்பலி மங்கள ஆராத்தியுடன் தொடங்கியது. அருட்பணி பிரான்சிஸ் சேவியர் நிகழ்ச்சிகளை தொகுத்தார். அருட்தந்தை ஜாண்குழந்தை மறையுரை வழங்கினார். அருட்தந்தை டேவிட் மைக்கேல் ஏற்புரையுடன் நன்றி கூறினார். விழாவிற்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ், கோட்டாறு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விழாவில் குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம், தலைமை செயலாளர் ரசல்ராஜ், வட்டார முதல்வர்கள் ராஜேந்திரன், பெர்பெச்சுவல் ஆன்றனி, செங்கல்பட்டு குருகுல முதல்வர் பாக்கிய ரெஜிஸ், திருச்சி மறைமாவட்ட நிர்வாகி சகாயராஜ், சென்னை மறைமாவட்ட இயக்குனர் இக்னேஷியஸ் தாமஸ், ஜான்பால் கல்லூரி செயலர் ஜார்ஜ் பொன்ைனயா உள்ளிட்ட ஏராளமான அருட்தந்தையர், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.

திருப்பலிக்குப்பின் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத்,  முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன்,திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், தக்கலை ஒன்றிய தலைவர் அருள் ஆன்றனி, மாவட்ட திமுக துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் அருளானந்த ஜார்ஜ், திக்கணங்கோடு ஊராட்சி தலைவர் ராஜம், சடையமங்கலம் ஊராட்சி தலைவர் வக்கீல் அருள்ராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்  வாழ்த்தினர். முதியோர் இல்லத்திற்கு உணவு, மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Related Stories:

>