×

ஊட்டி ஏரியில் விழுந்துள்ள ராட்சத மரங்களால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம்

ஊட்டி, ஜன. 19: ஊட்டி ஏரியில் விழுந்துள்ள ராட்சத கற்பூர மரங்களால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கடந்த பருவமழையின்போது ஊட்டி ஏரியில் விழுந்த பல மரங்கள் ஏரியின் கரையோரங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், சில மரங்கள் நீரில் மூழ்கி பாதியளவு காணப்படுகிறது. இப்பகுதிக்கு படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் சில சமயங்களில் அந்த மரங்களில் மோதிக் கொள்கின்றனர். ஆனால், மிகவும் வேகம் குறைந்த மிதி படகு என்பதால், எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. சில சமயங்களில் அந்த மரங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.

இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுற்றுலாத்துறையினர்  ஏரியில் பல இடங்களில் விழுந்து தண்ணீரில் தொங்கிக் கொண்டும்,மூழ்கியும் உள்ள ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Ooty Lake ,
× RELATED ஊட்டி ஏரி கரையோரத்தில் உள்ள நடைபாதை...