×

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

ஊட்டி, ஜன.19: பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை ஊட்டிக்கு 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஊட்டிக்கு  நாள் தோறும் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சற்று அதிகமாக காணப்படும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி செவ்வாய்கிழமை முதல் நேற்று வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்து.

இதனால் தமிழகத்தில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஊட்டிக்கு படையெடுத்தனர். இதில் கடந்த 14ம் தேதி 5 ஆயிரத்து 748 பேரும், 15ம் ேததி 10 ஆயிரத்து 740ம், 16ம் ேததி 14 ஆயிரத்து 69 பேரும், 17ம் தேதி 12 ஆயரித்து 840 பேரும் என 43 ஆயிரத்து 397 பேர் வந்திருந்தனர். நேற்று வார விடுமுறை நாள் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது.

பொங்கல் பண்டிைகயையொட்டி கடந்த 5 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர். பொதுவாக பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது, தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள்

Tags : holidays ,Ooty ,
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...