×

ரயில் பெட்டியில் தவித்த ஆண் குழந்தை மீட்பு

ஈரோடு, ஜன.19:   ஈரோட்டில் ரயில் பெட்டியில் தவித்த 18 மாத ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, 3 மணி நேரத்தில் தாயிடமே ஒப்படைக்கப்பட்டது.ஈரோடு ரயில் நிலையத்துக்கு திருவனந்தபுரம்-சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு வந்தது. ரயில் பெட்டியில் ஆண் குழந்தை ஒன்று தாய் இல்லாமல் தனியாக இருப்பதாக சேலம் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு பயணி ஒருவர் புகார் அளித்தார். ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார், சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் பிளாட்பார்ம் 1ல் நின்ற திருவனந்தபுரம்-சென்னை அதிவிரைவு ரயில் பெட்டியில் தவித்து கொண்டிருந்த 18 மாத ஆண் குழந்தையை மீட்டு ஈரோடு ரயில்வே போலீசில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

குழந்தையின் தாய் திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் பாலா வீதியை சேர்ந்த கலையரசன் மனைவி பரமேஸ்வரி (32) தனது குழந்தையை தவறவிட்டது குறித்து கோவை ரயில்வே போலீசில் புகார் அளித்தார். பின்னர், கோவை போலீசார், குழந்தை ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ளது என கூறி, பரமேஸ்வரியை கொச்சுவேலி-மைசூர் செல்லும் ரயிலில் ஈரோட்டிற்கு அனுப்பி வைத்தனர். அந்த ரயில் நேற்று நள்ளிரவு 2.55 மணிக்கு ஈரோடு வந்தது. ஈரோடு ரயில்வே போலீசிடம் குழந்தை குறித்து புகார் அளித்தார். அதில், கோவை ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ரயிலில் இருந்து இறங்கினேன். திரும்பி வருவதற்குள் ரயில் கிளம்பி சென்றுவிட்டதாக கூறி குழந்தையின் உரிய அடையாளம், ஆதாரங்களை போலீசிடம் பரமேஸ்வரி காட்டினார். இதை உறுதி செய்த போலீசார், அந்த குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு