×

விமானப்படையில் சேர ஆன்லைனில் தேர்வு

ஈரோடு, ஜன.19: இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான குரூப் எக்ஸ், குரூப் ஒய் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு மார்ச் 19 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருமணம் ஆகாத இளைஞர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்வில் கலந்து கொள்ள வயது வரம்பு 2000ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி முதல் 2003ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதிக்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குரூப் எக்ஸ் பணியிடத்திற்கு 12ம்வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இயற்பியல், கணிதம், ஆங்கிலம் பாடத்துடன் தேர்ச்சி அத்துடன் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

குரூப் ஒய் பணியிடத்திற்கு 12ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதுடன் கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு தொழில் கல்வி படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். மேலும், 020-25503105, 25503106 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Air Force ,
× RELATED நாடு முழுவதும் நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு..: ஐ.சி.ஏ.ஐ அறிவிப்பு