×

கோபி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் காயம்

கோபி, ஜன.19:  கோபி அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (63), இவரது மனைவி அலமேலு (50). இவர்களது மகள் காயத்திரி (20). மூவரும் காரில் கோவை சென்றுவிட்டு நேற்று நள்ளிரவு கோபி திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது, அத்தாணியில் இருந்து சத்தி நோக்கி சென்ற கார், மகாலிங்கத்தின் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், காரில் இருந்த மகாலிங்கம் உட்பட மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அத்தாணியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gopi ,
× RELATED பெட்ரோல்-டீசல் விலை வித்தியாசம்...