விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

திண்டிவனம், ஜன. 19: திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக ஆய்வாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் ஆனந்த் தலைமை தாங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர் டிகேபி.ரமேஷ் வரவேற்றார். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் செஞ்சி சிவா, பொதுக்குழு உறுப்பினர் ரமணன், மாவட்ட துணை செயலாளர் வசந்தா, நகர பொருளாளர் ஆசிரியர் கண்ணன், இளைஞரணி அமைப்பாளர்கள் பிரபா, சம்பத், பிரசன்னா, செஞ்சி பழனி, கதிரவன், நரேஷ், அண்ணாதுரை, ஒலக்கூர் பிரகாஷ், ஜெயபிரகாஷ், மேல்மலையனூர் மணிகண்டன், மயிலம் ராமமூர்த்தி, நகர இளைஞர் அணி ஷாகித் பாஷா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தலைவர் கலைஞர் பிறந்தநாள் தங்க கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவது, இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் சம்பந்தமாகவும், இளைஞரணி ஆக்கப் பணிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Villupuram Northern District ,DM Youth Advisory Meeting ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ₹2.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்