பைரவருக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம், ஜன. 19: நெல்லிக்குப்பம் அடுத்த திருகண்டேஸ்வரம் பகுதியில் புகழ் வாய்ந்த ஹஸ்த தாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஈசானிய மூலையில் அமைந்துள்ள ஆனந்த கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் கணக்கர் சரவணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதேபோல் மேல்பட்டாம்பாக்கம் சுப்ரமணியர் சுவாமி கோயிலில் கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Bhairav ,
× RELATED சிவராத்திரியில் சூரிய பூஜை