கொங்கணாபுரம் சனி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

இடைப்பாடி, ஜன.19: கொங்கணாபுரம் சனி சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. மேலும் 91 டன் காய்கறிகள் விற்பனையானதில் ₹3 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நேற்று சனி வார சந்தை கூடியது. தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, பவானி மற்றும் உள்ளுர் பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள், 5 ஆயிரம் ஆடுகள், 1800 பந்தய சேவல் மற்றும் கோழிகள், கேரட், தக்காளி, ெபரிய வெங்காயம் என 91 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காங்கேயம், ஈரோடு, தொட்டியம், துறையூர் மற்றும் சேலம் பகுதியில் இருந்து திரளான வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ₹5,300 முதல் 5,800க்கும், 20 கிலோ எடைகொண்ட ஆடு ₹11 ஆயிரம் முதல் ₹11,700 க்கும், வளர்ப்பு குட்டி ஆடு ₹1,400 முதல் 1900க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதே போல் பந்தய சேவல்கள் அதன் திறன் பொறுத்து ₹900 முதல் ₹5 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இவைகளை வாங்க வெளியூர்களில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். சேவல், ேகாழிகள் என ₹100 முதல் 950 வரை விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளில் 27 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ₹ 300 முதல் 450 வரையும், சின்னவெங்காயம் ₹70 முதல் 100க்கும், பெரிய வெங்காயம் ₹40 முதல் 60க்கும், கேரட் ₹30 முதல் 45க்கும், பீன்ஸ் ₹30 முதல் 40க்கும், உருளை கிழங்கு ₹20 முதல் 25க்கும், முள்ளங்கி ₹10 முதல் 15க்கும், முட்டை கோஸ் ₹15 முதல் 20க்கும், கத்தரிக்காய் ₹30 முதல் 40க்கும், இஞ்சி ₹60 முதல் 70க்கும், மிளகாய் ₹30 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் சந்தைக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும் ₹3 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: