×

4000 மூட்டை பருத்தி ₹80 லட்சத்திற்கு ஏலம்

இடைப்பாடி, ஜன.19: கொங்கணாபுரம் வேளாண் சங்கத்தில் 4000 மூட்டை பருத்தி ₹80 லட்சத்திற்கு விற்பனையானது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடப்பது வழக்கம். இதன் படி நேற்று நடந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4000 மூட்டை பருத்திகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் டிஜிஎச் ரகம் குவிண்டால் ₹6112 முதல் 6649 வரையும், பிடி ரகம் குவிண்டால் ₹4952 முதல் 5369 வரையும், பிடி 2வது ரகம் குவிண்டால் ₹4399 முதல் 4800 வரையும் ஏலம் போனது. மொத்தம் 4000 மூட்டை பருத்தி ₹80 லட்சத்திற்கு ஏலம் போனது. முதல்வர் எடப்பாடி 21ம் தேதி சேலம் வருகைசேலம், ஜன. 19: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வரும் 21ம்தேதி ஆத்தூரில் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் வரும் 21ம்தேதி (செவ்வாய்) மாலை நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக செவ்வாய்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். இதுகுறித்தான ஆலோசனை கூட்டம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் தலைமையில் ஆத்தூரில் நடந்தது. அப்போது அவர் கூறுகையில், ‘‘ஆத்தூர் பகுதி மக்களுக்காக புதிய குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வசிஷ்ட நதியின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபோல எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார். எனவே 21ம்தேதி நடக்கும் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுகூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளவேண்டும்,’’ என்றார்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்