×

1.59 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

நாமக்கல்,  ஜன.19: நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 1.59 லட்சம் குழந்தைகளுக்கு இன்று (19ம் தேதி) போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதுமாக 1,276 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம்  முழுவதும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு  மருந்து வழங்கும் முகாம் இன்று  (19ம் தேதி) நடக்கிறது. போலியோ எனப்படும்  இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும என் நோக்கத்தோடு, நாடு முழுவதும்  பிறந்த குழந்தை முதல், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ  சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி இன்று (19ம் தேதி) நடத்தப்படும்  சிறப்பு முகரில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1.59 லட்சம் குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள 1,276  முகாமில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, 5 வயதிற்குட்பட்ட  குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  உள்ளது. இதற்கென அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  துணை சுகாதார நிலையங்களில்  போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக பொது சுகாதாரத்துறை ஒருகிணைந்த  குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி  மற்றும் உள்ளாட்சித்துறை என சுமார் 5,118 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

மேலும்,  மாவட்டம் முழுவதுமாக மக்கள் கூடும் இடங்களான கேயில்கள், பேருந்து நிலையம்,  ரயில் நிலையம், சுங்கச்சாவடிகள் போன்ற இடங்களில் 52 சிறப்பு முகாம்  அமைக்கப்பட்டுள்ளது. இதில் 27 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.  சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சகாதாரத்துறை மற்றும் பிற துறைகளை  சார்ந்த 126 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எனவே இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில், பிறந்த  குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரையிலும், கட்டாயமாக அழைத்து வந்து சொட்டு மருந்து  போட்டு பயன்பெறவும் என மாவட்டம்  நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...