×

குடந்தை அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கும்பகோணம், ஜன. 19: கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரத்தில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலில் சதுர்காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை 5 மணி முதல் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் பைரவர் சுவாமிக்கு வெள்ளி கவசம், வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டனர். தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : Kupantai Ammasatram Saptarisheeswarar Temple ,
× RELATED ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி...