×

ஓவியம் வரையும் வெளிநாட்டினர் தஞ்சை- சென்னைக்கு பகல்நேர அதிவேக ரயில் இயக்க வேண்டும்

தஞ்சை, ஜன. 19: தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகல் நேர அதிவேக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அன்பரசன் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிற்கு முன்னதாக பொதுமக்கள் ஆலோசனைகள் சொல்லலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. தற்போது தஞ்சையிலிருந்து சென்னை செல்வதற்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை தவிர வேறு ரயில் ஏதும் இல்லை. ஏற்கனவே மீட்டர்கேஜ் இருந்தபோது இயக்கப்பட்ட ரயில்களையும் புதிதாக தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ஒரு அதிவேக ரயிலும் விட வேண்டும். தஞ்சை- அரியலூர், தஞ்சை- பட்டுக்கோட்டை, நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை, கும்பகோணம்- விருத்தாசலம் ஆகிய ரயில்வே திட்டங்களுக்கு அதிக பணம் ஒதுக்கி மேற்படி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்குடியிலிருந்து பேராவூரணி, பட்டுக்கோட்டை வழியாக புதிய விரைவு ரயில் இயக்க வேண்டும். தமிழகத்தில் புதிதாக தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 14 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த கஜா புயலின் பாதிப்பிலிருந்து இன்னும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதி மக்கள் மீளவில்லை. பேராவூரணி பகுதியில் தென்னையைச் சார்ந்த தொழிற்சாலை துவங்க வேண்டும். தேசியவுடைமையாக்கப்பட்ட வங்கியிலிருந்து விவசாயிகள் வாங்கிய கடன்களையும், கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு செய்தவர்களுக்கு விதிக்கப்படுகிற ஜி.எஸ்.டி. வரியை வாபஸ் பெற வேண்டும். தஞ்சையில் புதிதாக விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Foreigners ,Tanjore ,Chennai ,
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை