×

குட்டையாக மாறிய அமராவதி ஆறு கரூர் மாவட்டத்தில் 1.25 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம்

கரூர், ஜன. 19: கரூர் மாவட்டத்தில் 1.25லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 652.20 மிமீ. சராசரி அளவை விட குறைந்த அளவிலேயே மழை பெய்து வருகிறது. எனினும் பரவலாக பெய்து வரும் மழையைப் பயன்படுத்தியும், காவிரியாற்றில் வரும் நீரை பயன்படுத்தியும் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். நடப்பாண்டு கரூர் மாவட்டத்தில் 1.25 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உணவு தானிய உற்பத்தி இலக்கினை சரியாக அடைந்திட ஏதுவாக சான்று பெற்ற நெல்ரக விதைகளான பிபிடி 5204, கோ 50, கோ 51, டிகேஎம் 13 ஆகியவை 113.37 டன், சிறுதானியங்கள் சோளம் சிஎஸ்வி 20, கே 12, குதிரைவாலி கோ 2, வரகு கோ 3 ஆகிய ரகங்கள் 3.87 டன், துவரை கோஆர்ஜி 7, உளுந்து விபிஎன் 5, விபிஎன் 6, கொள்ளு பிஒய் 2 மொத்தம் 32.28 டன், பயறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை விதை ரகம் கே 6, கே 9, ட்டிஎம்வி 13, கோ 6. கோ 7 மற்றும் தாரணி ரகம் மொத்தம் 10.06 டன் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டது.

இருப்பில் உள்ள அனைத்து விதைகளும் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. அதன்படி தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் நெல் இயக்கத்தின் மூலம் கோ 50, கோ 51, டிகேஎம் 13 ஆகிய நெல் விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.20 அல்லது 50 சதவீத மானியத்திலும், உளுந்து வம்பன் 5, வம்பன் 6, ஆகிய விதைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறு வகை திட்டத்தின்கீழ் கிலோவுக்கு ரூ.50 அல்லது 50சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. எண்ணெய் வித்துப்பயிரான நிலக்கடலைக்கு தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்க திட்டத்தில் கிலோவுக்கு ரூ.40 அல்லது 50 சதவீத மானியமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டாரத்தில் உள்ள காவிரி பாசன பகுதிகளில நெல் விளைச்சல் அமோகமாக இருக்கிறது.
 இந்த ஆண்டு நெல் அறுவடை குறிப்பிட்ட இலக்கை அடைய இருக்கிறது. பொங்கல் பண்டிகை முடிந்ததையடுத்து அடுத்த சில தினங்களில் நெல் அறுவடை தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Amravati River ,Karur district ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...