×

₹1.5 கோடியில் சென்டர் மீடியன் அமைக்கும் பணி தொடங்கியது விஐடி பல்கலைக்கழகம் முதல் கார்ணாம்பட்டு வரை

வேலூர், ஜன.19: காட்பாடி விஐடி பல்கலைக்கழகம் முதல் கார்ணாம்பட்டு வரை விபத்துகளை தடுக்கும் வகையில் ₹1.5 கோடி மதிப்பில் சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இருந்து கார்ணாம்பட்டு செல்லும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயமடையும் சம்பவம் தொடர் கதையாகி வந்தது. மேலும் திருவலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை இருப்பதால் இச்சாலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால் அப்பகுதியில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் ஆய்வு செய்தனர். இப்பணிகள் முடிவடைந்த தொடர்ந்து சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இருந்து கார்ணாம்பட்டு வரை செல்லும் 4.5 கிலோமீட்டர் தூரத்தில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. 15 மீட்டர் அகலம் உள்ள இச்சாலையில் சென்டர் மீடியன் அமைப்பதற்காக ₹1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது, பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் மார்ச் மாத முதல் வாரத்தில் நிறைவடைய உள்ளது. இதனால் இப்பகுதியில் விபத்துகளை தடுக்க முடியும்’ என்றனர்.

Tags : Karnampattu ,VIT University ,
× RELATED விவசாய பணிக்கு டீசல் வாங்கி வரும்போது விவசாயியை மறித்து பைக் பறிமுதல்