ராஜபாளையத்தில் உடல் நலனை வலியுறுத்தி சைக்கிள் பேரணி திமுக எம்பி தொடங்கி வைத்தார்

ராஜபாளையம், ஜன. 19:  மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா விருதுநகர் மற்றும் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், மத்திய அரசின் பிட்  இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் நோக்கில், சைக்கிளை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், நடைப்பயிற்சி குறித்தும், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ராஜூக்கள் கல்லூரியில் நடந்த சைக்கிள் பேரணி தொடக்க விழாவில், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரமேஷ்குமார் வரவேற்றார். தென்காசி தொகுதி திமுக எம்பி தனுஷ் எம்.குமார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில், ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ், ஆடிட்டர் சுரேஷ்குமார் மற்றும் ராஜபாளையம் நகர்நல மருத்துவர் சரோஜா, கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன், நேரு யுவகேந்திரா மாவட்ட தேசிய இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஞானச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கந்தசாமி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் பொன்.சுரேஷ், கணேசன் மற்றும் கனகவல்லி ஆகியோர் செய்திருந்தனர். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Bicycle rally ,DMK ,Rajapalayam ,
× RELATED சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற...