×

உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் நள்ளிரவில் இருதரப்பு மோதல் 27 பேர் மீது வழக்கு

திருச்சுழி, ஜன. 19:  நரிக்குடி அருகே, உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பைச் சேர்ந்த 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நரிக்குடி அருகே எஸ்.மறைக்குளம் ஊராட்சியில் கடந்த 2016ல் உள்ளாட்சி தேர்தலின்போது, திமுகவைச் சேர்ந்த ராம்பிரசாத் வெற்றி பெற்று தலைவராக இருந்தார். அப்போது அவருக்கு எதிராக அதிமுக சார்பில் அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் போட்டியிட்டார். இதனால், இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், தற்போது எஸ்.மறைக்குளம் ஊராட்சி தனி பஞ்சாயத்தாக அறிவிக்கப்பட்டதால், தர்மராஜின் ஆதரவாளர் தன்ராஜ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே, ராம்பிரசாத் தரப்பும், தர்மராஜ் தரப்பும் சிறு, சிறு சலசலப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சுழி டிஎஸ்பி சசிதர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக மறைக்குளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ராம்பிரசாத் தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீதும், தர்மராஜ் தரப்பைச் சேர்ந்த 15 பேர் மீதும் அ.முக்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : clash ,
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...