×

விருதுநகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விருதுநகர், ஜன. 19: நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால் பூட்டி சீல் வைக்கப்பட்ட கடைகளின் முன்பகுதியை ஆக்கிரமித்து கடையை தொடர்ந்து நடத்திய ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றி எச்சரிக்கை செய்தனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் நகராட்சிக்கு வாடகை செலுத்த ாத24 நகராட்சி கடைகளை ஆணையர் பார்த்த சாரதி தலைமையில் அலுவலர்கள் கடந்த வாரம் பூட்டி சீல் வைத்தனர். நகராட்சி சீல் வைத்த கடைகளின் உரிமையாளர்கள் நகராட்சிக்கான வாடகையை செலுத்தாமல் சீல் வைத்த கடைகளுக்கு முன்பாக தள்ளுவண்டி, பெட்டிகள் மற்றும் செட் போட்டு ஆக்கிரமிப்புகள் செய்து கடையை தொடர்ந்து நடத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்த நகராட்சி ஆணையர், சீல் வைக்கப்பட்ட கடைகளின் முன்பகுதியை ஆக்கிரமித்து நடத்தப்பட்ட கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நகராட்சி வருவாய் அலுவலர் சங்கர் கணேஷ் தலைமையில் ஆய்வாளர் குருசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.  மேலும் நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால் பூட்டி சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு முன்பகுதியை ஆக்கிரமித்து கடைகளை தொடர்ந்து நடத்துவது தவறு என எச்சரிக்கை செய்தனர்.

Tags : Occupational Stores ,Virudhunagar ,
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...