×

கூடலூர் அருகே காட்டு யானைகளால் வாழைத்தோப்பு நாசம் அகழி அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கூடலூர், ஜன. 19: கூடலூர் வெட்டக்காடு பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ஏராளமான வாழைமரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. எனவே, இப்பகுதியில் விவசாயத்தை பாதுகாக்க வனப்பகுதியை ஒட்டி அகழிகள் அமைக்க வனத்துறையினர் முன் வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தேனி மாவட்டம், கூடலூர் வெட்டுக்காடு, கப்பாமடை, வேளாங்காடு ஆகிய குதிகளில் விவசாயிகள் வாழை, தென்னை பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர். வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த விளைநிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைத்தனர்.ஆனால், தற்போது இந்த அகழி மண்மேவி கிடப்பதால் வனப்பகுதியிலிருந்து காட்டுப்பன்றி, மான், யானை போன்ற வனவிலங்குகள் வெளியேறி அடிக்கடி விளைநிலத்திற்குள் புகுந்து, விவசாய நிலத்தை நாசப்படுத்துகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெட்டுக்காடு பகுதியில் உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த வைரபிரபு என்ற விவசாயியின் செவ்வாழை தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. வாழைமரங்கள் தார் போட்டு குலை வெட்டும் தருவாயில் யானை சேதப்படுத்தியதால் விவசாயிக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களை பாழ்படுத்தி வருவதால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்ததுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ``சுமார் 500 ஏக்கரில் இந்த பகுதியில் வாழை விவசாயம் செய்து வருகிறோம். கடந்த ஒருமாதமாக இப்பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. ஆனால், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. எனவே, இப்பகுதி விவசாயத்தைக் காப்பாற்ற இங்குள்ள விவசாய நிலங்களைச் சுற்றி அகழியோ, மின் வேலியோ

Tags : Cuddalore ,
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு