×

நாளை மின்தடை

தொண்டி, ஜன. 19:  தொண்டி பகுதியில் நாளை திங்கள் கிழமை மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.தொண்டி துணை மின் நிலையத்தில் நாளை 20ம் தேதி திங்கள் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம், எஸ்.பி.பட்டினம், வட்டாணம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என திருவாடானை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை