×

வத்தலக்குண்டுவில் திமுக கொடியேற்று விழா

வத்தலக்குண்டு, ஜன. 19: வத்தலக்குண்டு திமுக சார்பில் காளியம்மன் கோயில் அருகே நடந்த பொங்கல் விழாவிற்கு நகர செயலாளர் சின்னத்துரை தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் முருகன் கொடியேற்றினார். அதேபோல் கடைவீதியில் நடந்த விழாவிற்கு முன்னாள் நகர செயலாளர் காந்தி என்ற காளிமுத்துவும், பஸ்நிலையம் முன்பு நடந்த விழாவில் மாவட்ட பொருளாளர் மணிமுருகனும் கொடியேற்றினர். இதில் திமுக நிர்வாகிகள் கனகதுரை, சிதம்பரம், முருகேசன், குமரவேல், அமுதவேல், ரவி, தவமணி, வினோத், அந்தோணி, சகாப்தீன், சிக்கந்தர் பாஷா, இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Tags : DMK ,flag ceremony ,Wattalakundu ,
× RELATED வத்தலக்குண்டுவில் சாலையின்...