×

கொடைக்கானல் பண்ணைக்காட்டில் பூப்பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா

கொடைக்கானல், ஜன. 19: கொடைக்கானல் கீழ்மலையான பண்ணைக்காட்டில் பொங்கலையொட்டி மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகள் நடந்தன. பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்வேதாராணி, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். திருமலை செல்வன் வரவேற்றார். போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்.

இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், மேல், கீழ் மலை ஒன்றிய செயலாளர்கள் ராஜதுரை, கருமலை பாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் முகமது இப்ராகிம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வினோத்குமார், முத்துக்குமார், ராம்குமார், திருமலை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Badminton Tournament ,
× RELATED தேசிய அளவிலான பூப்பந்து போட்டி வத்திராயிருப்பு மாணவர்களுக்கு தங்கம்