கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது

மதுரை, ஜன. 19: மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
 * மதுரை எல்லீஸ்நகர் போடிலைன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். சோதனையில், எல்லீஸ்நகர் போடிலையன் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(39), திடீர்நகர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா(30), எல்லீஸ்நகரைச் சேர்ந்த தனபாக்கியம்(65) என தெரியவந்தது.

 இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி எஸ்ஐ., திலீபன் புகாரின் பேரில் இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். இவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். * மதுரை, செல்லூர் மற்றும் அண்ணாநகர்  பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த தத்தனேரி பகுதியைச் சேர்ந்த  பாண்டியராஜன்(32), செல்லூரைச் சேர்ந்த பாண்டிச்செல்வி(38) இவர்களை கைது  செய்த செல்லூர் போலீசார், இவர்களிடமிருந்து 1.400 கிலோ கிராம் கஞ்சா  மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர். * இதேபோல் அண்ணாநகர் பகுதியைச்  சேர்ந்த முரளி(21), கரும்பாலை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன்(19),  எல்லீஸ்நகரைச் சேர்ந்த பிரதீப்(19), திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த  பாண்டியம்மாள் ஆகியோரை கைது செய்து 1.450 கிலோ கிராம் கஞ்சா 3 செல்போனை  பறிமுதல் செய்தனர்.

Tags : Nine ,
× RELATED ஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு