மேலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம்

மேலூர், ஜன. 19: மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். மேலூர் அருகே திருவாதவூரில் உள்ளது ஸ்ரீ ஐயம்மாள் கோயில். இக்கோயிலின் 4ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 15 காளைகள் போட்டியில் கலந்து கொண்டது. இவற்றை அடக்க 150க்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் இருந்தனர்.

காளைகளை அடக்க முயன்ற போது 20க்கும் மேற்பட்ட வீரர்கள் மாடு முட்டியதில் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திரளான மக்கள் மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர். மேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : soldiers ,
× RELATED அரிமளம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி