வாடகைக்கு அறை எடுத்து தங்கி செல்போன் பறிக்கும் கும்பல்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய்பாபு (30). இவர், நேற்று முன்தினம் இரவு வடபழனி 100 அடி சாலையில் நடந்து சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் இவரிடம் செல்போன் பறிக்க முயன்றது. சுதாரித்துக்கொண்ட விஜய்பிரபு, தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் துரத்தியது. அப்போது, ரோந்து போலீசார் அவ்வழியே வந்தனர். அவர்களிடம் விஜய்பாபு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். போலீசாரை பார்த்ததும் அந்த மர்ம நபர்கள் தப்பியோடினர். அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், ஓட்டேரி பகுதியை சேர்ந்த செரிப் என்பதும், இவர் தனது நண்பர்களுடன் திருவல்லிக்கேணி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து, சென்னையின் பல்வேறு பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags : gang ,room ,
× RELATED ஊத்தங்கரை அருகே இரவு நேரத்தில் செம்மரங்களை வெட்டிய மர்ம கும்பல்