×

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

வேலூர், ஜன.13: தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் சார்பில் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான காசநோய் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் நெப்போலியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நலக்கல்வியாளர் ஏகாம்பரம் வரவேற்றார்.

இதில் பேசிய மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் பிரகாஷ் ஐயப்பன் பேசுகையில், ‘காசநோய்க்கு முக்கிய அறிகுறி தொடர்ந்து 2 வாரங்களுக்கு இருமல், பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் கண்டவுடன் சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒருங்கிணைந்த சிகிச்சை மேற்கொண்டால் காசநோயில் இருந்து முழுமையாக விடுபடலாம். இதற்கான மருத்துவ பரிசோதனை, உயர்தர சிகிச்சை, மாத்திரகைள் அனைத்தும் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறப்பாக பதில் அளித்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காசநோய் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ அலுவலர் அகிலா நன்றி கூறினார்.

Tags : TB Eradication Awareness Camp ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்...