×

கடும் பனிப்பொழிவால் கருகும் தேயிலை செடிகள்

மூணாறு, ஜன.14: மூணாறில் தற்பொழுது குளிர் காலம் நிலவிய நிலையில் முக்கிய எஸ்டேட் பகுதிகளில் உறைபனி அதிகரித்துள்ளது. உறை பனி காரணமாக தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளது. கடந்த வருடங்களில் பெய்த கனமழைக்கு பின்னர் தற்பொழுது மூணாறு இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளது. இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குளிர் காலம் துவங்கியுள்ளது. மூணாறில் நிலவும் குளிர் மற்றும் பனி பொலிவை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகரித்த நிலையில் எஸ்டேட் பகுதிகளில் கடும் பனி பொலிவு மூலம் உறை பனி நிலவுகிறது. பனி பொலிவு மைனஸ் டிகிரி அதிகரித்த நிலையில் உறை பனியில் உருகுகிறது. கடும் பனி காரணமாக மூணாறில் உள்ள தேயிலை தோட்டங்கள் கருகி வருவதாகவும் உறை பனி மூலம் தேயிலை செடிகள் கருகும் காரணத்தால் தேயிலை விவசாயம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Tea plants ,
× RELATED மூணாறில் கடும் உறைபனி: தேயிலை செடிகள் கருகின