×

புகையில்லா போகி விழிப்புணர்வு முகாம்

பெரும்புதூர், ஜன.14: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு  நலப்பணி திட்ட பொன்விழா ஆண்டை முன்னிட்டு, புகையில்லா போகி குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் திவ்யபிரியா தலைமை வகித்தார். கல்வித்துறை அலுவலர்கள் உமாபதி, சென்னை விமான நிலைய மேலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Smokeless Boogie Awareness Camp ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...