சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு, ஜன. 14: செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே துவங்கிய பேரணி, செங்கல்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தூய கொலம்பா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முடிந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு, தலைகவசம் அணிவதன் அவசியம், போக்குவரத்து விதிகள் பின்பற்றுவது ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன், டிஸ்பி கந்தன் ஆகியோர் சாலை விபத்து, பாதுகாப்பான பயணம், பைக் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசணை வழங்கினர்.

Tags :
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி