×

தீ விபத்தால் வீடுகளை இழந்த இருளர் மக்களுக்கு நிதியுதவி: திமுக எம்எல்ஏ வழங்கினார்

கூடுவாஞ்சேரி, ஜன.14: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சி தமிழ்ச்செல்வி நகரில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இதன் அருகில் சுமார் 30 இருளர் குடும்பத்தினர் 45 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். கடந்த 11ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 22 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. இதையடுத்து உடமைகளை இழந்தவர்களை, அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்து அரிசி, துணிகளை வழங்கி செங்கல்பட்டு தாசில்தார் உதவி செய்தார்.

இந்நிலையில், காயரம்பேடு ஊராட்சி திமுக செயலாளர் சுப்பிரமணி தலைமையில், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம் ஆகியோர் நேற்று மேற்கண்ட பகுதிக்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.பின்னர், அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ₹5ஆயிரம் நிதியுதவி, பாத்திரங்கள், துணி மணிகளை வழங்கினர். அப்போது காலம், காலமாக சுடுகாட்டு நிலத்தில் வசிப்பதாகவும், தற்போது வீடுகளை இழந்துள்ளதால் மாற்று இடம் வழங்கி வீடுகளை கட்டி தரும்படி இருளர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அனைவருக்கும் வீடுகளை கட்டித்தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் உறுதியளித்தார்.அப்போது, முன்னாள் திமுக ஊராட்சி தலைவர்கள் ஸ்ரீராமன், தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் பரிமளாதேவி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags : DMK MLA ,fire ,homes ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...