×

நயினார்கோவில் ஒன்றியக்குழு தலைவியாக மாணவி தேர்வு

பரமக்குடி, ஜன.14:  பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியக்குழு தலைவியாக பி.எட். மாணவி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் என மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 9 ஒன்றிய வார்டுகளில் திமுக, அதிமுக தலா நான்கு வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. தேர்தல் அலுவலர் குமரேசன் முன்னிலையில் ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் 5வது வார்டு கவுன்சிலரான வினிதா போட்டியிட்டார். இதில் 6 வாக்குகளை பெற்று அதிமுக வெற்றி பெற்றது. திமுக 3 வாக்குகளை பெற்றது. வினிதா ஒன்றியக்குழு தலைவியாக தேர்ந்தெடுக்கபட்டார். நயினார்கோவில் அதிமுக ஒன்றிய செயலாளரான குப்புசாமியின் மகள் வினிதா(23). கல்லூரியில் பி.எட் இறுதியாண்டு படிக்கிறார்.

Tags : Student ,union committee ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...