×

வதிலையில் பாலியல் தொந்தரவு: அரசு ஊழியர் மீது வழக்கு

வத்தலக்குண்டு, ஜன. 14: வத்தலக்குண்டுவில் பாலியல் தொந்தரவு தந்த அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அதிகாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றும் 57 வயது பெண் ஊழியர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ‘நான் கணவர் இறந்த பின்பு ஆன்மீகத்தில் ஈடுபட்டு சித்தாந்த ரத்தினம் என்ற பட்டமும் பெற்றுள்ளேன். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் 34 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து அதற்கு விருதுகளும் பெற்றுள்ளேன்.வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த பாலமுருகன் (52) என்னிடம் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளால் பேசியும், எனது வாட்ஸ் அப்புக்கு தகாத படங்களை அனுப்பியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். எனவே அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், எனக்கு தக்க பாதுகாப்பு கொடுக்கும்படியும் கேட்டு கொள்கிறேன்’ என கூறப்பட்டிருந்தது. இப்புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் லதா, பாலியல் தொந்தரவு கொடுத்த பாலமுருகன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Sexual harassment ,servant ,
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்