×

ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் 15 பவுன், ரூ.2 லட்சம் பணம் திருட்டு

பழநி, ஜன. 14: பழநி டவுன், இந்திரா நகரை சேர்ந்தவர் மருதசாமி (70). ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக கோவைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். நேற்று மருதசாமியின் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டிருப்பதை அருகில் வசிக்கும் வீட்டினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மருதசாமி மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான பழநி டவுன் போலீசார் விரைந்தனர். அப்போது வீட்டினுள் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டின் பீரோவினுள் இருந்த 15 பவுன் நகை, பணம் ரூபாய் 2 லட்சம் ஆகியவை திருடு போனது மருதசாமி அளித்த தகவல்மூலம் தெரிந்தது.
தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர்கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இதுகுறித்து மருதசாமி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பழநியில் வழக்கறிஞர் அருளானந்த முத்துக்குமாரசாமி வீட்டில் 50 பவுன் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட நிலையில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : real estate broker house ,
× RELATED காரைக்காலில் ரூ.2 லட்சம் சாராய...