×

ஒட்டன்சத்திரம் கல்லூரியில் எந்திரங்கள் கண்காட்சி

ஒட்டன்சத்திரம், ஜன. 14: ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை கலாம் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து கல்லூரி வளாகத்தில் எந்திரங்கள் கண்காட்சி 2020ஐ இரண்டு நாட்கள் நடத்தியது. முதல்வர் பிரிட்டோ வரவேற்றார். தாளாளர் ரிச்சர்டு முன்னிலை வகித்தார். கிறிஸ்துவ ஐக்கிய கல்வி- சுகாதார நிறுவனத்தின் இணை இயக்குனர் ஜேக்கப்தாமஸ், செயலாளர் மைக்கேல் குமார், பொருளாளர் நிர்மலா ஜெயராஜ், வேடசந்தூர் எம்விஎம் பள்ளி தாளாளர் சூடாமணி, சென்னை கலாம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குனர்கள் கௌரிரீகன், குணசீலன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் எந்திரங்கள் கண்காட்சியை திறந்து வைத்து விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பங்கள், ரோபோட்டுகள் குறித்து கருத்துரை வழங்கினார். துறை தலைவர் நாச்சிமுத்து நன்றி கூறினார்.

Tags : Exhibition of Machinery ,Ottansatram College ,
× RELATED ஒட்டன்சத்திரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா