×

சாத்தான்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் தேசிய இளையோர் வார விழா

சாத்தான்குளம், ஜன.14: சாத்தான்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரத்தில்  நேரு யுவகேந்திரா, விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளையோர் தினவிழாவாக கொண்டாடப்பட்டது.
இதில் விவேகானந்தர் உருவபடத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.  வெற்றி பெற்றவர்களுக்கு வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி துணைத்தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் பரிசு வழங்கினர். இதில் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : National Youth Weekend ,Ouvenkateswarapuram ,Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...