×

கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

வள்ளியூர், ஜன. 14: கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட  இரு அணு உலைகள் அமைத்து செயல்பட்டு வருகின்றன.  இவ்விரு அணுஉலைகளிலும் உற்பத்தியாகும் மின்சாரமானது நெல்லை அபிஷேகபட்டியில் உள்ள மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 12ம் தேதி மாலை 6 மணியளவில் திடீரென ஏற்பட்ட வால்வு பிரச்னையால் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 900 மெகாவாட் மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து கூடங்குளம் பணியாளர்கள் வால்வில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ததை அடுத்து மின் உற்பத்தி நேற்று மீண்டும் துவங்கியது. இதையடுத்து 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Tags : Kudankulam ,nuclear power plant ,
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...