×

மதுரா கோட்ஸ் சார்பில் விகேபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வி.கே.புரம், ஜன.14:  வி.கே.புரம்  மதுரா கோட்ஸ் சார்பில்  சமூக பொறுப்பு நிதியிலிருந்து நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு வி.கே.புரம் மதுரா கோட்ஸ் சார்பில்  சமூக பொறுப்பு நிதியிலிருந்து 2பிரிட்ஜ், ஆபரேஷன் உபகரணங்கள், போட்டோ தெரபி, கணினி மற்றும் பிரிண்டர் உள்ளிட்டவற்றை சேரன்மகாதேவி முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் சாந்தகுமாரிடம் வழங்கினர்.  மற்றும் பாபநாசம் வனச்சரகத்திற்கு ஆர்ஒ பிளாண்ட் மற்றும் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வண்ணம் குப்பை   தொட்டிகளையும் முண்டந்துறை வனச்சரகர் சரவணக்குமார், பாபநாசம் வனச்சரக வனவர் மோகன் ஆகியோரிடம்  வழங்கப்பட்டது. இதில் மதுரா கோட்ஸ் உற்பத்தி இயக்குநர் பிரபிர்சக்ரபோத்தி, ஆலை பொது மேலாளர்கள்  ராஜேஸ்வாசுதேவன்,  சினுரங்கநாதன், தொழியியல் உறவு மேலாளர்  சூரியபிரபா, மில் பொறியாளர் பாலகிருஷ்ணன், டாக்டர் லதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Mathura Coates ,
× RELATED மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்க மகா சபை கூட்டம்