×

பொங்கல் சந்தை களைகட்டியது ஒரு ஜோடி கரும்பு ரூ.150-க்கு விற்பனை

உடுமலை, ஜன. 14: உடுமலையில் பொங்கல் சந்தை களைகட்டியது. ஒரு  ஜோடி கரும்பு கடந்த ஆண்டைவிட ரூ.50 கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் நாளை (15ம் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே பொதுமக்கள் பொங்கலுக்கு தயாராகிவிட்டனர். வீடுகளுக்கு வெள்ளையடித்து, அலங்கரித்துள்ளனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மண் பானை, கலர் கோலப்பொடி, கரும்பு, மஞ்சள் கொத்து, பூளைப்பூ உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.உடுமலை சந்தைக்கு திண்டிவனம் மற்றும் மதுரை மேலூரில் இருந்து 50 லாரிகளில் கரும்பு லோடு வந்து குவிந்துள்ளது. ஒரு லாரிக்கு 30 டன் வீதம் கரும்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு விளைச்சல் குறைவால் குறைந்தளவே கரும்பு வந்தது. தற்போது அதிகளவு வந்துள்ளது.ஒரு ஜோடி கரும்பு தற்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.100-க்கு விற்றது. இதேபோல், மஞ்சள் கொத்து செடியும் அதிகளவு விற்பனைக்கு குவிந்துள்ளது. ஒரு கட்டு மஞ்சள் கொத்து ரூ.30-க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்பனையானது.பொதுமக்கள் கூறுகையில், கரும்பு வரத்து அதிகரித்தபோதும்கூட, விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. மற்ற பொருட்கள் ஓரளவுக்குதான் விலை அதிகரித்துள்ளது. கரும்பு விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

Tags : sale ,Pongal Market ,
× RELATED ரூ.1 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்