×

குண்டும், குழியுமான மண் சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

உடுமலை, ஜன. 14: உடுமலை அருகே கரட்டூர் கிராமம் அமைந்துள்ளது.  எரிசனம்பட்டி-தேவனூர்புதூர் சாலையில் இருந்து பிரிந்து, மண் சாலை வழியாக 3 கி.மீ. தூரம் நடந்து இந்த கிராமத்துக்கு செல்ல வேண்டும். இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஏராளமான தோட்டத்து சாளைகளும் உள்ளன. தி.மு.க.வை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சாவின் சொந்த ஊர் இதுவாகும். குண்டும், குழியுமான மண் சாலையில் வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகி விடுவதால் மிகவும் அவதிப்படுகின்றனர். குக்கிராமங்களுக்கு கூட தார்சாலை அமைத்து, மினி பஸ் சென்று வரும் நிலையில், 400 குடும்பங்கள் வசிக்கின்ற கரட்டூருக்கு இன்னும் மண் சாலையை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே, உடனடியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட சோளிபாளையத்தை அடுத்த பாட்டையப்பாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டையப்பாநகர் பிரதான வீதியில் சாலை வசதி இல்லை. இதனால் அங்கு சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதுடன் பள்ளங்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதேபோல் அந்த பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் இதுபோன்று சாலை இருப்பதால் பள்ளி வாகனங்கள் அந்த பகுதிக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.  இதனால் மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் தார்சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,dirt road ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...