×

காங்கயம் நகராட்சியில் வீடுகளுக்கு சீரான குடிநீர் வினியோகிக்க ரூ.10 லட்சத்தில் புதிய குழாய்கள் அமைப்பு

காங்கயம், ஜன.14: காங்கயம் நகரத்தில் வீடுகளுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய ரூ.10 லட்சம் செலவில் புதிய குழாய் அமைத்து விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. காங்கயம் நகராட்சி மக்கள் பயனடையும் வகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக நகரத்தில் பல இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் நான்காவது வார்டு, மற்றம் ஐந்தாவது வார்டு பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய் உடைந்தும், பல இடங்களில் தொடர்ந்து பழுதடைந்து வந்தது, 800 வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பில் தண்ணீர் செல்லாமல் பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து காங்கயம் நகராட்சி சந்தைபோட்டை பகுதியில் உள்ள உயர்நிலை தொட்டியில் இருந்து, சென்னிமலை ரோடு, பழையகோட்டை ரோடு வழியாக, ரூ.10 லட்சம் செலவில், புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்தால் 800 வீடுகளுக்கு குடிநீர் சீராக செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...