×

போகி பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு, ஜன. 14:போகி பண்டிகையையொட்டி ஈரோட்டில் பூலாப்பூ, ஆவாரம் பூ, வேப்பிலை கட்டு விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று (14ம்தேதி) போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பழையன கழித்து, புதியன புக விடும் நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புதியனவற்றை வரவேற்கும் வகையில், வீட்டின் கூரையில் வேப்பிலை, ஆவாரம்பூ, பூலாப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவது வழக்கம். இதையொட்டி, ஈரோடு மாநகரில் உள்ள பன்னீர் செல்வம் பார்க், பெரியமாரியம்மன் கோயில், மணிக்கூண்டு, நேதாஜி மார்க்கெட், சூரம்பட்டி நால் ரோடு, சம்பத்நகர், மேட்டூர் ரோடு உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வேப்பிலை, ஆவாரம் பூ, பூலாப்பூ ஆகியவற்றை காப்பு கட்ட ஏற்றவாறு சிறு சிறு கட்டுக்களாக கட்டி வியாபாரிகள் ரோட்டோரம் விற்பனை செய்து வருகின்றனர்.இதில் மூன்று கட்டு ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆவாரம்பூ, பூலாப் பூ, வேப்பிலை கட்டுக்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Tags : Poki Festival ,
× RELATED போகி பண்டிகையின் போது ஏற்படும்...