×

பள்ளி ஆசிரியைக்கு மிரட்டல் போலி இன்ஸ்பெக்டர் கைது

கோவை, ஜன.14:  கோவை போத்தனூர் சங்கமம் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மனைவி ராஜேஸ்வரி (47). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் சில மாதத்துக்கு முன்பு ராம்நகரை சேர்ந்த தனக்கு தெரிந்த பிரதீப்குமார் என்பவருக்கு தொழில் நிறுவன தேவைக்காக கடன் ெகாடுத்திருந்தார். இந்த பணத்தை பிரதீப்குமாரிடம் திருப்பி கேட்டார். ஆனால் அவர் கடனை திருப்பி தரவில்லை. இந்நிலையில் ராஜேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘நான் காட்டூர் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவம் பேசுகிறேன். நீங்கள் பிரதீப்குமாரிடம் பணம் கோட்டு மிரட்டுவதாக புகார் வந்திருக்கிறது. இனி இதுபோல் மிரட்டினால் வழக்குப்பதிவு செய்து விடுவேன். உங்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியிருக்கும். இனி அவரது செல்போனில் தொடர்புகொண்டு பணம் கேட்டால் வழக்குப்பதிவு செய்வேன்’’ என எச்சரித்தார். இது தொடர்பாக ராஜேஸ்வரி, செல்போன் பேச்சு பதிவு அடிப்படையில் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ராஜேஸ்வரியை மிரட்டியது பிரதீப்குமாரின் தம்பி பிரசாந்த் கோத்தாரி (27) என்பது தெரியவந்தது.  இது தொடர்பாக போலீசார் மிரட்டல், ஆள் மாறாட்ட வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் கோத்தாரியை கைது செய்தனர்.

Tags : School teacher ,inspector ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு