×

அம்மன் கல்லூரியில் பொங்கல் விழா

ஈரோடு, ஜன.14: சித்தோடு  அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக மாணவர்கள் வேட்டி அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர்.
விழாவையொட்டி, கல்லூரி வளாகம் முழுவதும் பல விதமான அலங்காரங்களுடன் வண்ண கோலமிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாவிலை தோரணங்களும், மஞ்சளும், கரும்பும் கட்டப்பட்டிருந்தது. கல்லூரியில் பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.பொங்கல் விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் பாலகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஷ் வாழ்த்துரை வழங்கினார். பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை கல்லூரி தாளாளர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார். நாட்டுப்புறக் கலைகளான சிலம்பாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சலங்கையாட்டம், புலியாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவர்களுக்கு பல்வேறு கலை மற்றும் கலாசாரம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. உரியடித்தல், சாக்கு ஓட்டம் மற்றும் வீர விளையாட்டுகளும், பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சாதி, மத, இன பாகுபாடின்றி கேரளா, வடஇந்தியா போன்ற பிற மாநில மாணவர்கள் மற்றும் சூடான், கென்யா, நைஜீரியா போன்ற அயல்நாட்டு மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Tags : Pongal Festival ,Amman College ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...