×

கொடைக்கானல் பல்கலையில் யோகா பயிற்சி முகாம்

கொடைக்கானல், ஜன. 14: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு பொது நல வாரியம், சர்வதேச சமுதாயம் ஆய்வு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு வார கால யோகா பயிற்சி வகுப்பினை நடத்தியது. பல்கலை மாணவிகள் மட்டுமின்றி கோவை, நெல்லை பகுதிகளை சேர்ந்த மாணவிகள், கொடைக்கானலுக்கு வந்த வெளிநாட்டினர் உள்ளிட்டோருக்கு யோகா, யோக முத்திரை, தியானம், தவம், சிரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிறைவு விழாவிற்கு பல்கலை துணைவேந்தர் வைதேகி தலைமை வகிக்க, உலக சமூக சேவா சங்கர் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ராஜம் வரவேற்றார். பயிற்சி ஏற்பாடுகளை பேராசிரியர் ஜெயப்பிரியா செய்திருந்தார். டாக்டர் ஹேமாமாலினி நன்றி கூறினார்.

Tags : Yoga Training Camp ,Kodaikanal University ,
× RELATED புதுக்குளத்தில் யோகா பயிற்சி முகாம்